பிள்ளைகளுக்கு வெளியுலகத்தை காட்டாத பெற்றோர்.. பிரான்ஸில் கொடூர சம்பவம்!

0

பிரான்ஸில் 10 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் பெற்றோரால் கொடுமை நடத்தப்பட்டுள்ளது.

பாதுகல மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது என பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளதுடன், பிள்ளைகளுக்கு பாரிஸில் உள்ள மனநல மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பிரான்ஸ் ஊடங்கள் இது திகில் வீடு என விபரித்துள்ளன.

இந்த மர்ம வீட்டில் உடன்பிறந்தவர்கள் நரக வேதனையை அனுபவித்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த குடும்பத்தை சேர்ந்த 24 வயதுடைய மகன் தந்தையால் வீட்டை விட்டு அடித்து வெளியேற்றப்பட்டுள்ளான்.

இந்நிலையில் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தந்தைக்கு எதிராக முறைப்பாடு செய்ததன் மூலம் இந்த வீடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீட்டுக்கு பொலிஸார் சென்ற போது பிள்ளைகள் கொடூரமான நிலையை அனுபவித்துள்னர்.

அங்கு 2 மற்றும் 5 வயதுடைய சிறுவர்கள் உயரமான நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகள் என 10 பிள்ளைகளையும் பெற்றோர் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரித்த போது பிள்ளைகள் தவறான வழியில் செல்வதனை தவிர்ப்பதற்காக தாம் அவ்வாறு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அந்த குடும்பத்தினர் மூத்த மகனுக்கு 24 வயதாகின்ற போதிலும் ஏனைய 9 பேரும் படிக்கும் வயதில் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

அயலவர்களிடம் வினவிய போது இந்த குடும்பத்தினர் பெரிய அளவில் யாருடனும் பழக்கம் வைத்திருப்பதில்லை.

ஓர் இரண்டு பிள்ளைகளை தாம் பார்த்திருப்பதாக கூறியுள்ளனர்.

10 பிள்ளைகள் உள்ளார்கள் என கூறிய போது அயலவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

10 பிள்ளைகளில் பலர் இதுவரையில் வெளி உலகையே பார்த்ததில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோர் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த தம்பதியினருக்கு 24 வயதில் இருந்து 2 வயது வரையுள்ள 10 பிள்ளைகள் உள்ளனர்.

அதற்காக அரசாக உதவித்தொகையாக மாதம் 2700 யூரோக்கள் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் பெற்றோர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனையும் 45000 யூரோ அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here