பிளாஸ்டிக் கவரில் பெண்ணின் சடலம்…. பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

மலேசியாவின் Shah Alam பகுதியில் பைக் கடை ஒன்று சாலையோரத்தில் உள்ளது.

இந்த கடைக்கு பின்புறத்தில் ஒரு குப்பை தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு நிர்வாணமான நிலையில் ஒரு பெண்ணின் சடலம் வீசப்பட்டுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் சடலத்தின் மீது சுற்றியிருந்த கவரை அகற்றினர்.

அப்போது உண்மையான பெண்ணின் சடலம் என்று கருதி கவரை அகற்றிய அதிகாரிகளுக்கு உண்மையான பெண் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பெண்ணின் வடிவத்தில் மெழுகால் செய்யப்பட்ட பொம்மை ஒன்று இருந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here