பிளாஸ்டிக்கை டொலர்களாக மாற்றும் இலங்கை நிறுவனம்!

0

பிளாஸ்டிக் என்பது இந்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் மூலம் டொலர்களை சம்பாதிக்கலாம் என்று சொன்னால், பலரும் நம்பாத உண்மையாகவே இருக்கும்.

ஒரு வருடத்தில் உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் அளவு நானூற்று எண்பத்தொரு பில்லியனுக்கும் அதிகமாகும்.

ஒவ்வொரு நிமிடமும் விற்கப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் அளவு ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரித்திருப்பதும் தீவிரமான விடயமாகும்.

வருடத்திற்கு கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக்கின் அளவு எடையின் அடிப்படையில் சுமார் 13 மில்லியன் டன்கள் ஆகும்.

இதனால் கடல்வாழ் உயிரினங்களும் கடல் அமைப்புமே கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

இவ்வாறானதொரு தருணத்தில், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மறுசுழற்சி செய்து பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்து, நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இலங்கையின் தொழில்முனைவோர் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ECO SPINDLES தனியார் நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

ஹொரண ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் அமைந்துள்ள இந்த மறுசுழற்சி தொழிற்சாலை இலங்கை முதலீட்டுச் சபையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு ப்ளாஸ்டிக் மறுசுழற்சியினால் மூலம் தும்பு தடி, தூரிகைகள், பொலிஸ்டர் நூல் என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதன்மூலம் தயாராகும் நூலைக்கொண்டே இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடை தயாராகிறது.

நாடு முழுவதும் உள்ள 18 தண்ணீர் போத்தல் சேகரிப்பு மையங்கள் மூலம் சேகரிக்கப்படும் போத்தல்களை 4 மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்புகிறது. அவ்வாறாக மாதத்திற்கு சேகரிக்கப்படும் தண்ணீர் போத்தல்களின் அளவு சுமார் பத்து மில்லியன் ஆகும்.

இவை சுமார் 250 முதல் 300 மெட்ரிக் டன் எடை கொண்டவையாகும்.

நாடளாவிய ரீதியில் 525 தண்ணீர் போத்தல் மறுசுழற்சி தொட்டிகள் மூலமும், மேல் மாகாணத்தில் 459 மறுசுழற்சி தொட்டிகள் மூலமும் நாளாந்தம் அதிகளவான பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை சேகரிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here