பிறந்த நாள் வைபவத்தில் நடந்த பயங்கரம்…! 7 பேர் பலி

0

அமெரிக்காவில் Colorado பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் புகுந்த நபர் அங்கிருந்த நபர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Colorado-வில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்கு துப்பாக்கியுடன் புகுந்த நபர், அங்கிருந்த நபர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

துபாக்கிச் சூடு நடத்திய நபரும், இதில் உயிரிழந்துள்ளான்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் காதலி இருந்ததாகவும், அவர் மீது இருந்த வெறுப்பின் காரணமாக இப்படி ஒரு கொடூர செயலை அவன் செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணையில் 6 வயதான ஆண்கள் மற்றும் ஒரு நடுத்த ஆண் ஆகியோர் உயிரிழந்திருப்பதாகவும், ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

Colorado பகுதியின் தலைமை பொலிஸார் Vince Niski கூறுகையில், இந்த சம்பவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here