பிறந்த குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்க்கு வழங்கப்பட்ட வினோத தீர்ப்பு

0

நேபாளத்திலிருந்து 2017-ஆம் ஆண்டு 24 வயதாகும் பபிதா ராய் (Babita Rai) தனது 20 வயதில் ஒரு பராமரிப்பு தொழிலாளியாக இங்கிலாந்துக்கு வந்துள்ளார்.

திருமணமாகாத நிலையில் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் மே 15 ஆம் திகதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இரவு 11 மணியளவில் ஹாம்ப்ஷயர் (Hampshire) மாநிலத்தில் Aldershot நகரத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றுள்ளார்.

யாரும் இல்லாத அந்த பூங்காவில், ஒரு பெரிய மரத்திற்கு பின்னால் மறைவாக இருட்டுக்குள் சென்று அவருக்கு அங்கேயே ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கர்பமாக இருந்ததையே மறைத்த பபிதா, பிறந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல், அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

நான்கு நாட்கள் கழித்து, பூங்காவில் தோட்ட பராமரிப்பாளர் ஒருவர், இறந்து கிடந்த அந்த குழந்தையைப் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், குழந்தை பிறந்த 6 மணி நேரத்திற்குள் இறந்துவிட்டதாகவும், இறப்பதற்கு முக்கிய காரணமாக மண்டை ஓடுகள் நசுங்கும் அளவிற்கு தலையில்பலமாக இரண்டு முறை அடிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை வழக்காக பதிவு செய்து, ஏறக்குறைய 3 ஆண்டுகள் விசாரணையை மேற்கொண்டனர்.

இறந்த குழந்தைக்கு Baby M என பெயரிட்டனர்.

ஒரு வழியாக சிசிடிவி காட்சிகள், சாட்சியங்கள் மற்றும் DNA உள்ளிட்ட சில ஆதாரங்களை வைத்து பொலிஸார் பபிதாவை கைது செய்தனர்.

2020 மே மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட பபிதா, நேற்று வரை விசாரணை கைதியாகவே நீதிமன்ற சிறைச்சாலையில் இருந்துள்ளார்.

ஏனென்றால், குழந்தை அவருடையது என்று ஒப்புக்கொண்டாலும், அதனை அடித்ததாகவோ, கொலை செய்ததாகவோ அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

பபிதா தரப்பில் வாதாடிய வக்கீல், குழந்தை பிறந்த அந்த நேரத்தில் அவருக்கு PTSD எனும் மனநலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அப்போது நடந்த ஏதும் அவர் நினைவில் இல்லை என்றும், நியாபகமே இல்லாத ஒன்றை செய்ததாக எப்படி ஒப்புக்கொள்ள முடியும் என்றார்.

இந்நிலையில், Winchester Crown நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், நேப்பாளி பெண்ணான பபிதா ராய் 85 பவுண்ட் சட்டரீதியான கட்டணத்தை மட்டும் செலுத்த உத்தரவிட்டப்படடுள்ளது.

அவரை விடுதலை செய்து, மேலும் அவருக்கு 30 நாட்கள் மறுவாழ்வு மையத்தில் ஆலோசனை வழங்குபடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

பிரித்தானியாவில், சிசுக்கொலைக்கான குற்றம் 1920-களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, முதல் ஆண்டில் தங்கள் குழந்தைகளை கொன்ற பெண்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படாது.

தாய்க்கு பிரசவத்தினால் ஏற்படும் மனநல பாதிப்பு அல்லது ஒரு வகை மனநல கோளாறு இருப்பது கண்டறியப்பட்டால் இந்த சட்டம் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here