பிறந்த குழந்தையின் முகத்தில் வெட்டுக்காயம்… அதிர்ச்சி சம்பவம்

0

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பிறந்த குழந்தையின் முகத்தில் கோடு கிழித்தது போன்று பெரிய காயத்துடன் பிறந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விசாரித்ததில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவர்களின் கவனக்குறைவால், பிஞ்சு குழந்தையின் முகத்தில் கத்தி கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், குழந்தை பிறந்த உடனையே மருத்துவர்கள் அந்த பிஞ்சு குழந்தை முகத்தில் 13 தையல் போட்டுள்ளனர்.

கொலராடோவில் உள்ள டென்வர் சுகாதார மையத்திலேயே புதன்கிழமை இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் குழந்தை கேள்வி கேட்கும், அப்போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம் என தந்தை Damarqus Williams கவலையுடன் தெரிவித்துள்ளார்.

சுக பிரசவம் வேண்டும் என்றே குழந்தையின் தாயார் Reazjhana Williams ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் டென்வர் சுகாதார மைய மருத்துவர்கள் உடனடியாக பிரசவத்தை முன்னெடுக்கும் பொருட்டு மாத்திரைகளை அளித்து, அடுத்த சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக அறுவை சிகிச்சைக்கும் முடிவெடுத்துள்ளனர்.

மேலும் குழந்தையின் இதயத்துடிப்பு சில நொடிகள் கேட்காமல் போகவே, அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Shock pics show baby girl with huge cut across her face after emergency  C-section delivery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here