பிறந்து 2 வாரங்களான குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

இங்கிலாந்தில், பிறந்து இரண்டே வாரங்களான ஆண் குழந்தை ஒன்றை அதன் பெற்றோர் தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்சென்றுகொண்டிருந்தனர்.

கார் ஒன்று சாலையில் வந்துகொண்டிருந்த மற்றொரு காருடன் மோதியது.

சட்டென நடைபாதையில் ஏறி, அந்த குழந்தை இருந்த தள்ளுவண்டியை சுவற்றுடன் சேர்த்து நசுக்கிவிட்டது.

படுகாயமடைந்த குழந்தையை மருத்துவ உதவிக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

கண் முன்னே, பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கோரத்தைக் கண்டு பைத்தியம் பிடித்ததுபோல் கதறிய அந்த பெற்றோரை தேற்ற யாராலும் இயலவில்லை.

விபத்தை உண்டாக்கிய 34 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த பரிதாப சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here