பிறந்தநாள் கொண்டாட்டத்தால் சிறுமிக்கு நேர்ந்த கதி..!

0

ஒன்ராறியோவில் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுமி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்ராறியோவின் ஓஷாவா நகரில் 6 வயது சிறுமி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் குடியிருப்பு ஒன்றில் பெரிய கூட்டம் ஒன்று காணப்படுவதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசாரிடம், 6 வயது பெண் பிள்ளை ஒன்று மாயமானதாக கூறி, உதவக் கேட்டுள்ளனர்.

பொலிசார் அந்த குடியிருப்பு வளாகம் மற்றும் அருகாமையில் உள்ள பகுதி முழுமையும் தீவிரமாக தேடியுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்த குடியிருப்பு வளாகத்தின் நீச்சல் குளத்தில் தேடிய பொலிசாருக்கு, குழந்தையின் உடல் சிக்கியுள்ளது.

இதனையடுத்து, முதலுதவிக்கு பின்னர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச்சென்ற போதிலும் அவர் உயிரிழதுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே, பொலிசார் சம்பவப்பகுதிக்கு வந்து சேரும் முன்னர், பெண் ஒருவர் தமது பிள்ளையை காணவில்லை என கூறி, அப்பகுதியில் உதவி கேட்டு சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த குடியிருப்பின் உரிமையாளர் தமது மகளின் 6வது பிறந்தநாளை கொண்டாட வந்துள்ளார்.

மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்த பிறந்தநாள் நிகழ்வு இறுதியில் துயர சம்பவமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here