பிரேஸிலின் பெற்றோபொலிஸ் நகரில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் பலியானர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 200 இற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், அவசரகால நிவாரண பணிகளுக்காக பிரேஸில் அரசாங்கத்தினால் பெருமளவான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.