பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ மாகாணத்தில் கன மழை பெய்து வருகின்றது.
அதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்மாகாணத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரொபொலிஸ் உள்ளிட்ட நகரங்களில் நேற்று ஒரேநாளில் அதிகமான கனமழை பதிவானது.
இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், ரியோடி ஜெனிரோவில் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.