பிரேசிலில் கார் மற்றும் பேருந்து மீது ட்ரக் மோதி கோர விபத்து…!

0

பிரேசிலில் ஒரு அபாயகரமான சாலை சந்திப்பில், கார் மற்றும் பேருந்தின்மீது ட்ரக் ஒன்று மோதி விபத்துக்குளடளானது.

அபாயகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை ஒன்றின் குறுக்கே பேருந்து ஒன்று திரும்ப, அதைப் பின்தொடர்ந்து செல்ல கார் ஒன்று முயல்கிறது.

நெடுஞ்சாலையில் வேகமாக வந்த எரிபொருள் கொண்டு செல்லும் ட்ரக் ஒன்று அந்த காரின் மீது மோத, கார் சாலையில் இழுத்துச் செல்லப்படுகிறது.

அப்போது சரியாக எதிரே ஒரு பேருந்து வர, ட்ரக்கால் இழுத்துச்செல்லப்பட்ட கார் பேருந்துக்கும் ட்ரக்குக்கும் நடுவில் சிக்கி பெரும் தீப்பிழம்பாக மாறுகிறது.

காரின் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

பேருந்தில் பயணிகள் இல்லாததால் மேலும் வாகனங்கள் எதுவும் தொடர்ந்து வராததாலும்.பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ட்ரக்கின் சாரதியும், பேருந்தின் சாரதியும் காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளார்கள்.

வெளியாகியுள்ள வீடியோ காட்சியில் கார் மீது மோதிய ட்ரக் காரை இழுத்துச் செல்ல, பேருந்துக்கும் ட்ரக்குக்கும் நடுவே சிக்கி கார் திடீரென தீப்பிடித்து எரிவது பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here