பிரிவதாக கூறிவிட்டு ஒரே ஹோட்டலில் தங்கியுள்ள தனுஷ், ஐஸ்வர்யா.

0

கடந்த ஒரு வாரமாக தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து. சில நாட்களுக்கு முன் அவர்கள் இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து மனமொத்து பிரிவதாக ஊடகங்களுக்கு அறிவித்தனர்.

இதனால் அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் மீடியாவில் பரவி வந்தது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது ஹைதராபாத்தில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது வாத்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் இருக்கும் சித்தாரா ஹோட்டலில் தங்கியுள்ளார். அதைப்போல் ஐஸ்வர்யாவும் ஒரு லவ் சாங் டைரக்ட் செய்வதற்காக அதே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்.

இவர்களின் பிரிவு குறித்து தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். அதில் வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்கள் இருவருக்கும் இருக்கிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் விவாகரத்து இல்லை.

மேலும் ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நான் சில அறிவுரைகளை கூறி உள்ளேன். அதன்படி அவர்கள் இருவரும் விரைவில் ஒன்று சேருவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் இந்த விவாகரத்து முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். தற்போது இருவரும் ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் இந்த செய்தி அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் விரைவில் ஒன்று சேருவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here