பிரியந்த படுகொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு! ஆறு பேருக்கு மரணதண்டனை

0

இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 75 பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here