பிரித்தானிய வரலாற்றில் பாரம்பரியத்தை மாற்றிய மகாராணியார்!

0

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக, பாரம்பரியத்தை மாற்றம் ஏற்படவுள்ளது.

பிரதமர் தேர்வில் புதிய மாற்றம் ஒன்றை பிரித்தானிய மகாராணியார் செய்ய இருப்பதாக இரகசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் நிலையில், பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் பக்கிங்காம் மாளிகைக்குச் சென்று மகாராணியாரைச் சந்திப்பார்.

ஆனால், இம்முறை பிரதமராக தேர்வு செய்யப்படுபவர் பக்கிங்காம் மாளிகைக்கு பதிலாக, பால்மோரல் மாளிகைக்குச் சென்று மகாராணியாரைச் சந்திக்க இருக்கிறார்.

செப்டம்பர் 6 ஆம் திகதி புதிய பிரதமர் பதவியேற்க உள்ள நிலையில் தெரிவு செய்யப்படுபவர்.

பால்மோரல் மாளிகைக்குச் செல்வார்.

அவரது கைகளில் மகாராணியாரும், மகாராணியாரின் கைகளில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவரும் பாரம்பரியப்படி முத்தமிடுவார்கள்.

96 வயதாகும் மகாராணியாருக்கு பயணம் செய்வதில் பிரச்சினைகள் உள்ளன.

ஆகவே, அவர் தற்போது தங்கியிருக்கும் பால்மோரல் மாளிகையிலேயே தங்கியிருக்குமாறும், பயணத்தைத் தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

புதிய பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, போக வர 1000 மைல்கள் மகாராணியார் பயணம் செய்வதற்கு பதிலாக, பிரதமர் பயணம் செய்து மகாராணியாரை சந்திக்கும் வகையில் இரகசிய திட்டம் தீட்டப்பட்டு வருகின்றன.

ஆனால் இறுதி முடிவை மகாராணியார் தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here