பிரித்தானிய மருத்துவதனைகளில் திருட்டு சம்பவம்…! அதிர்ச்சியில் உறவினர்கள்…!

0

பிரித்தானியாவில் இறந்த பெண்ணின் உடலிலிருந்து அவரது நிச்சயதார்த்த மற்றும் திருமண மோதிரம் திருடப்பட்டுள்ளது.

குறித்த பெண் கடந்த 6ஆம் திகதி அவரது வீட்டில் திடீரென வழுக்கி விழ Princess Alexandra Hospital-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையிலும் மூன்று நாட்களில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவரது கணவர் இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர், அவருடைய பொருட்களை வாங்குவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது தான் அவரது நிச்சயதார்த்த மற்றும் திருமண மோதிரம் திருடு போனது தெரியவந்தது.

அதன் விலை மட்டும் £13,500-கள் ஆகும்.

இதனையடுத்து வழக்குபதிவு செய்த பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிகிச்சைக்காக குறித்த பெண்ணின் கையிலிருந்து மோதிரம் கழற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தனது மனைவியை இழந்த துக்கத்தில், தனக்கு மிகவும் நெருக்கமான அந்த மோதிரமும் காணாமல் போனதால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாராம் கணவர்.

மேலும் மோதிரம் குறித்த தகவல் தெரிந்தாலோ உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here