பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
அண்டை நாடுகள் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக் அறிவித்துள்ளது.
இதனால் பிரித்தானியா மேலும் பாதிக்கப்படவுள்ளதாகவும், நாடு மூன்றாவது அலையின் பிடியில் சிக்கவுள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
“நாங்களும் அதே நோற்று நோயைத் தான் எதிர்கொள்கிறோம், அதே பிரச்சினை தான் எங்களுக்கும் உள்ளது” என அஸ்ட்ராஜெனேகா ஏற்றுமதி தடை குறித்து போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தடுப்பூசிகளை தடை விதிக்கப்பட்டும் என அறிவித்ததிலிருந்து Brussels-க்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.