பிரித்தானிய மகாராணி மருத்துவ கண்காணிப்பில்

0

பிரித்தானிய மகாராணி, ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை, மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை அடுத்து, அவர் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்

அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும் குடும்பத்தினர் பால்மோரலுக்கு பயணம் செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

96 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த புதன்கிழமை ஒரு மெய்நிகர் ஆலோசனையில் கலந்துக்கொண்டதையடுத்து, அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியால் பிரித்தானியா முழுதும் ஆழ்ந்த கவலையில் இருப்பதாக பிரதமர் லிஸ்ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

தமது எண்ணங்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களின் எண்ணங்கள் முழுவதும் இந்நேரத்தில் மகாராணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளதாக பிரதமர் லிஸ்ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here