பிரித்தானிய மகாராணியின் சிலையை நொறிக்கிய கனடா மக்கள்…!

0

கனடாவில் 1,000 பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதனால் காலனி ஆதிக்கத்தின் மீது மக்கள் கோபத்தைத் திருப்பியுள்ளனர்.

விக்டோரியா மகாராணி, மற்றும் எலிசபெத் மகாராணியின் சிலைகளை கீழே தள்ளி முகத்தை சிதைத்து நாசம் செய்துள்ளார்கள்.

பிரித்தானிய மகாரணியாரும் கனடாவின் தலைவருமான எலிசபெத் மகாராணி, மற்றும் அவரது பூட்டியாரான விக்டோரியா மகாராணியின் வெண்கலச் சிலைகளும் பீடங்களிலிருந்து கீழே தள்ளப்பட்டுள்ளது.

முகம் சிதைக்கப்பட்டு, அவற்றின் மீது சிவப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு, சிலைகள் மீது கொடிகள் குத்தப்பட்டுள்ளன.

100 ஆண்டுகளுக்கும் மேலாக, 150,000 பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர்கள், கட்டாயப்படுத்தப்பட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டு, அவர்களது சொந்த மொழியில் பேசக்கூட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல குழந்தைகள் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கிட்டத்தட்ட 6,000 குழந்தைகள் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.

தற்போது, கூட்டம் கூட்டமாக 1,000க்கும் அதிகமான பிள்ளைகள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கோபத்தை கனடா தினத்தன்று மக்கள் பிரித்தானிய ராணிகளின் சிலைகள் மீது காட்டியிருக்கிறார்கள்.

தங்கள் குழந்தைகளைக் கொன்று குவித்த காலனி ஆதிக்கத்தின் முகமாக ராணிகளின் முகத்தை சித்தரித்து, அவற்றை அடித்து நொறுக்கியமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் அடித்து நொறுக்கப்பட்ட பிரித்தானிய மகாராணி சிலைகள்... 1,000  பூர்வக்குடியின குழந்தைகள் கொல்லப்பட்டதால் வெடித்தது மக்கள் கோபம் ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here