பிரித்தானிய பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர்….. பெரும் பரபரப்பு

0

லண்டனில் பாராளுமன்றத்திற்கு வெளியே பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் இளம் பெண் சாரா எவரார்ட் கொலை தொடர்பில் நீதி கேட்டு போராடும் அதே வேளையில்,

ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கவும், பொலிசாருக்கும் உளவிவகார செயலருக்கும் அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவை திரும்ப பெறக்கோரியும் பொதுமக்கள் முழக்கமிட்டனர்.

ஆனால் குறித்த மசோதாவை போரிஸ் அரசாங்கம் ஆதரிப்பதுடன், பொலிசாருக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர்.

இதுபோன்ற மசோதாக்கள் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதாக உள்ளது என ஒருசாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here