பிரித்தானிய பாடசரலையில் ஆசிரியரால் எழுந்துள்ள சர்ச்சை… பெற்றோர்கள் ஆவேசம்

0

இங்கிலாந்தில் Northumberland, Rothburyயில் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் Dr Thomlinson Church of England Middle School-ல் ஷார்ட்ஸ் அணிந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஆசிரியர் ஒருவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப்பள்ளியில் வேலைபார்க்கும் பெண் ஆசிரியர் ஒருவர், பெண் குழந்தைகளிடம் உடற்கல்வி (physical education) வகுப்புகளுக்கு ஷார்ட்ஸ் அணியாமல், PE பாவாடை (PE Skirt) அணிந்து வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஏனெனில், குட்டையான ஷார்ட்ஸ் அணிவது கற்பழிப்பு அல்லது பாலியல் வன்கொடுமைக்கான ‘ஆபத்தை’ ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

மாணவிகள் இதனை தங்கள் வீட்டில் கூற, ஆவேசமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த ஆசிரியர் செய்த தவறுக்காக பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது

மேலும், இது அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் கருத்து தானே தவிர, பள்ளியின் கருத்து அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியது.

மேலும், குறித்த பெண் ஆசிரியர் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைத்து மன்னிப்பு கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here