பிரித்தானியாவின் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரிக்கும் தடுப்பு மருந்தை பயன்படுத்தியவர்களுக்கு இரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஆஸ்திரியா நாட்டில் 42 வயதான செவிலியர் ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.
இதனால் அவருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, குறித்த மருந்து பயன்பாட்டை ஆஸ்திரியா சுகாதார நிர்வாகம் நிறுத்திக் கொண்டது.
இதுதவிர எஸ்டானியா, லட்வியா, லித்வானியா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டன.
தற்போது டென்மார்க்கிலும் இந்த மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டது.
மேலும் டென்மார்க், நோர்வே மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்துவதாகக் கூறியுள்ளன.
17 நாடுகளுக்கு சமீபத்தில் அஸ்ட்ராசெனெகா அனுப்பிய கொரோனா மருத்துகளில் இருந்தே இரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பிரித்தானியாவில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏதும் இல்லை என சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.