பிரித்தானியாவில் வாழும் அன்னா (18), பகலில் ஒரு சட்டக்கல்லூரி மாணவியாக கல்வி கற்று வருகின்றார்.
ஆனால், இரவு நேரங்களில் ஒரு பாலியல் தொழிலாளியாகவே செயற்படுகின்றார்.
இந்நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவியான Poppy Coburn, ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் மாணவிகள் மருத்துவர்களாவார்களா அல்லது இணைய வழி பாலியல் தொழிலாளிகளாவார்களா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Leicester பல்கலைக்கழகம், ‘Student Sex Work Toolkit’ என்ற அதிகாரப்பூர்வ வழிகாட்டும் நெறிமுறைகளையே வெளியிட்டுள்ளது.
சென்ற ஆண்டு, 3,200 மாணவிகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 4 சதவிகித மாணவிகள், அதாவது, 20இல் ஒரு மாணவி, கல்லூரியில் கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக பாலியல் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானியாவில் பயிலும் 2.38 மில்லியன் மாணவர்களில் 95,000 மாணவிகள் தற்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
500,000 மாணவிகள் பணக்காரர்களான வயதானவர்களின் பாலியல் தேவைகளை சந்தித்து பணம் சம்பாதிப்பதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதற்கு பணம் வேண்டும், ஆதலால் இப்படி செய்கிறோம் என்று மாணவிகள் தங்கள் செய்கைக்கு நியாயம் தேடுகின்றனர்.
நீண்ட காலத்துக்கு, அதாவது, ஒரு மாணவி படித்து முடித்து ஒரு மருத்துவர் ஆகிவிட்டார் என்றால் அப்போதும், அவர்களை பணத்துக்காக பயன்படுத்திக்கொண்டவர்கள் பிளாக் மெயில் செய்யும் அபாயம் உள்ளது என Coburn தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் கல்விக்காக இவ்வளவு அதிக தொகை வசூலிப்பதால், என்னை கல்விக்கட்டணத்துக்காக இப்படி ஒரு படுகுழியில் தள்ளிவிட்டது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.