பிரித்தானிய கல்லூரிக்குள் துப்பாக்கிச் சூடு… பதற்றத்தில் மாணவர்கள்

0

பிரித்தானியாவின் சசெக்ஸில் உள்ள ஒரு கல்லூரிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

சசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள கிராலி கல்லூரியின் வெளியே குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தரப்பில் இருந்து உறுதியான தகவல் வெளியாகும் வரையில், பொதுமக்கள் அப்பகுதியை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here