பிரித்தானிய இளைஞர்கள் எதிர் நோக்கும் தீவிரமான பிரச்சினை…!

0

பிரித்தானியாவில் மூன்று இளைஞர்களில் ஒருவர் தங்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி, தூங்க முடியாமல் அவதிப்படுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

18 முதல் 30 வயதுடைய இளைஞர்களில், பத்து பேரில் கிட்டத்தட்ட நான்கு பேர் தங்கள் ஸ்மார்ட் போன் திரைகளிலிருந்து விலகி இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆராய்ச்சியில் 1,043 பேர் ஸ்மார்ட்போன் போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

தங்கள் தொலைபேசியைப் பெற முடியாதபோது அவர்கள் அதிக வருத்தத்துக்கு உள்ளாகி கட்டுப்பாட்டை இழப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

லண்டனின் கிங்ஸ் காலேஜ் ஆப் சைக்காலஜி, சைக்காட்ரி & நியூரோ சயின்ஸ் (IoPPN) இந்த ஆய்வை Frontiers in Psychiatry-ல் வெளியிட்டுள்ளது.

24.7 சதவீதம் பேர் தங்கள் தொலைபேசியை ஒரு நாளைக்கு 3 மணி நேரம் பயன்படுத்துவதாகவும், 18.5 சதவீதம் பேர் 5 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு துக்கத்தை கெடுக்குமெனில் அதன் தாக்கம், ஒரு மனநல கண்ணோட்டத்தில் மிகவும் தொடர்புடையது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here