பிரித்தானிய அரச குடும்பத்தின் ரகசியம் வெளியானது..!

0

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் அரண்மனையிலிருந்து பிரபல பார் வரை சுரங்கப்பாதையை ரகசியமாக அமைத்திருப்பது தெரியவந்துள்ளது.

ரிச்சர்ட் ஈடன் என்ற Daily Mail-ன் ஆசிரியர் தான் மகாராணியார், ரகசிய சுரங்கப்பாதை வைத்திருப்பதை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பிரிட்டன் மகாராணியார் லண்டனில் இருக்கும் பிரபலமான டியூக்ஸ் என்ற பாருக்கு செல்வதற்காக ரகசியமான சுரங்கப்பாதை ஒன்றை வைத்திருக்கிறார்.

மகாராணியாருக்கு, மிகவும் விருப்பமான பார் அது. அதாவது மகாராணியாரின் பேத்தியான, Eugenie இளவரசியின் கணவர், Jack Brooksbank, என்னுடன் பார்ட்டியில் பங்கேற்றார். அப்போது, அவர் தான், St James’s அரண்மனையிலிருந்து, பார்-க்கு ரகசிய சுரங்கப்பாதை இருப்பது தொடர்பில் என்னிடம் கூறினார்.

மேலும், தற்போது வரை அதனை தான் பயன்படுத்தியது இல்லை என்றும் ஒரு தடவை அதன்மூலம் பாருக்கு செல்ல விரும்புவதாகவும் என்னிடம் கூறினார் என்று தெரிவித்திருக்கிறார். ராஜ குடும்பத்தின் ரகசியத்தை வெளியில் தெரியப்படுத்தியதற்கான Jack-ஐ பலரும் விமர்சிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here