பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள ‘Green List Countries’

0

பிரித்தானியாவில் வரும் மே 17-ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதி அளிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழம) புதிய Green List Countries அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் அடைப்படையில் உலக நாடுகளை பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று புதிய பட்டியல்களை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

இதில் Green List உள்ள நாடுகளுக்கு பயணிக்க எந்த வித கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்படாது.

Green Listல் உள்ள நாடுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், திரும்பி வரும்போது தனிமைப்படுத்தத் தேவையில்லாத போதும் வருகைக்குப் பின் ஒரு PCR சோதனை மட்டும் எடுக்க வேண்டும்.

மஞ்சள் பட்டியல் நாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் குறைந்தது 5 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தி, 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும்.

அதேபோல், சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்பவர்கள் நாடு திரும்பும் போது, தலா 1,750 பவுண்ட் சொந்த செலவில் அரசு அங்கீகரித்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 11 நாட்கள் தங்க வேண்டும்.

இதற்கிடையில் 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் தற்போது 12 நாடுகளைக் கொண்ட Green Listயை வெளியிட்டுள்ளது.

அதில் போர்ச்சுகல் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அசோர்ஸ் மற்றும் மடிரா தீவுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், புருனே, ஐஸ்லாந்து, ஃபாரோ தீவுகள், ஜிப்ரால்டர், பால்க்லேண்ட் தீவுகள்,தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள், இஸ்ரேல், செயிண்ட் ஹெலினா மற்றும் அசென்ஷன் மற்றும் டிரிஸ்டன் டா குன்ஹா ஆகியவை அடங்கும்.

இந்த நாடுகளுக்கு பிரித்தானியர்கள் வரும் 17-ஆம் திகதி முதல் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், பட்டியலில் உள்ள இந்த நாடுகளில், அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பிரித்தானிய பார்வையாளர்களை நாட்டில் அனுமதிப்பதில்லை.

இதனால், பிரித்தானியர்கள் மற்ற இடங்களுக்கு மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here