பிரித்தானியா மற்றும் ஸ்பெனிற்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்

0

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு ஐரோப்பியாவில் நாடுக்களுக்கிடையே பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நீக்குவதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகளைத் தவிர்க்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இருக்கும் என்று ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த திட்டத்தின் போது, அவர்களுக்கு பி.சி.ஆர் சோதனை தேவையில்லை.

ஸ்பெயினுக்குச் செல்லும் பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் திரும்பி வரும்போது தனிமைப்படுத்த வேண்டியிருக்கும்.

இதற்கிடையில், பிரித்தானியாவிலிருந்து வரும் எவரும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜேர்மனி அறிவித்துள்ளது.

ஜேர்மனிய பொது சுகாதார நிறுவனம் இந்த முடிவு இந்திய கொவிட்-19 மாறுபாட்டுடன் தொடர்புடையது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here