தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது.
தற்போது வரை 600-க்கும் மேற்பட்ட ஒமைக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளது.
இதனால், அரசு பிளான் பி திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இருப்பினும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, அவர் இந்த ஒமைக்ரான் வைரஸ் நம்மை பாதிக்காது என்று நினைப்பது மிகவும் தவறு என்று எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவிற்கான மூன்றாவது, அதாவது பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்த அதிவேக பரவல் எப்படி உருவாகிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.
எனவே, மக்கள் நம்மை இந்த ஒமைக்ரான் வைரஸ் தாக்காது என்று சாதரணமாக இருக்க வேண்டும்.
இந்த பூஸ்டர் தடுப்பூசிகள் நாளை முதல் பெரியவர்களுக்கும், புதன் கிழமை முதல் இளைஞர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்