பிரித்தானியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

0

பிரித்தானியாவின் பல பகுதிகளில் குளிர் மோசமாக உள்ளதால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் அறிகுறிகள் பற்றி கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் பிரித்தானியா கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளையும், பெருமளவு குறைந்துள்ளது.

இதன் காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக கட்டுப்பாடுகள் இல்லாமல், மக்கள் தொடர்ந்து பழகுவதால், பருவகால நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொரோனா காலக்கட்டத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால், நோய்கள் வேகமாக பரவுகின்றன என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பலர் நோய்வாய்ப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பிரபல ஆங்கில ஊடகமான தி மிரர் வெளியிட்டிருக்கும் செய்தியில், பிரித்தானியர்கள் பலர் இந்த குளிர்காலக்கட்டத்தில் பயங்கரமான அறிகுறிகளை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக, தொண்டை, மார்பு இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை அறிகுறிகளாக உள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட மருத்துவர் பிலிப்பா கேய், ஒரு சாதாரண குளிர்காலத்தில் முன்பு எப்போதும் பார்க்காத வகையில், இப்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

இணையவாசிகள் சில இந்த குளிர் காரணமாக என்னென்ன அறிகுறிகளை பெற்று வருகிறோம் என்பது குறித்து குறிப்பிட்டு வருகின்றனர். அதில், ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் இப்போது லண்டனில் இருக்கும் குளிரால் அடிபணிந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும், சிலர், நான் வாரம் முழுவதும் குளிரால் அவதிப்பட்டேன், அதனால் எனக்கு இருமல் பிரச்சனை வந்தது. ஆனால் அது கோவிட் இல்லை, என் குடும்பத்திற்கே சளிப் பிரச்சனை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தற்போது வரை பிரித்தானியாவில் கொரோனா பரவல் இருப்பதால், அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்று பார்க்கப்படுகிறது.

இது குறித்து உலகின் மிகப் பெரிய கோவிட் ஆய்வு மையமான ZOE கூறுகையில், lateral flow test-ல் உங்களுக்கு எதிர்மறையான முடிவு வந்தால், நீங்கள் நிச்சயமாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், உங்களுக்கு அறிகுறிகள் தொடர்ந்தால், PCR சோதனை பெறுவது சிறந்தது என்று கூறியுள்ளது.

உங்களுக்கு புதிய மற்றும் தொடர்ச்சியான இருமல் இருந்தால் காய்ச்சல் (37.8C க்கு மேல் வெப்பநிலை) அல்லது உங்கள் சுவை அல்லது வாசனையின் மாற்றத்தை நீங்கள் கவனித்திருந்தால், நீங்கள் உடனடியாக கோவிட் பிசிஆர் பரிசோதனையை பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here