பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடி திட்டம்…!

0

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஜி-7 தலைவர்களை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தவுள்ளார்.

ஜி-7 மாநாடு ஜூன் 1 1ஆம் திகதி இங்கிலாந்தின் Cornwall-ல் ஆரம்பமாக்கி 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கொரோனாவுக்கு பின் இருக்கும் மிகப்பெரிய சவால்களிலிருந்து எப்படி நாம் மீண்டெழ போகிறோம் என உலகம் நம்மை எதிர்நோக்கி இருக்கிறது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடுவது மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய சாதனை படைக்கும்.

இக்கொடூரமான தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவர எங்களுடன் இணையுமாறு எனது சக ஜி-7 தலைவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பேரழிவை மீண்டும் நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here