பிரித்தானியா பிரதமர் போரிஸின் இந்திய பயணம் ரத்து…

0

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்திய பயணம் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரித்தானியா பிரதமர் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த வாரம் இந்தியா செல்ல மாட்டார்.

அதற்கு பதிலாக, பிரதமர்கள் மோடி மற்றும் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான எதிர்கால கூட்டாண்மைக்கான அவர்களின் திட்டங்களை ஒப்புந்தம் செய்து தொடங்குவது குறித்து இந்த மாத இறுதியில் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நேரில் சந்திக்க எதிர்நோக்கியிருக்கிறார்கள் என பிரித்தானியா பிரதமர் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

4 நாள் பயணமாக ஏப்ரல் 25-ஆம் திகதி இந்தியா வர போரிஸ் ஜோன்சன் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் டெல்லியில் இன்று இரவு 8 மணி முதல் முதல் வரும் 26-ம் திகதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here