பிரித்தானியா சென்ற 10 இலங்கையர்கள் தலைமைறைவு   

0

இலங்கையில் இருந்து பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர்.

ஜூடோ வீரர் மற்றும் பயிற்சியாளரின் இருப்பிடத்தை பொலிசார் கண்டுபிடித்தாலும், அவர்களுக்கு 180 நாட்கள் விசா இருந்ததால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலை காரணமாக வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்கள் அணியில் இருந்து வெளியேறியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here