பிரித்தானியா இளவரசி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவருக்கு 74 வயது. சில தினங்களுக்கு முன் இளவசர் சார்லஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது அவரது மனைவி இளவரசி கமிலாவுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கமிலா, தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், அரசாங்க வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாக அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமிலா 3 டோஸ் தடுப்பூசி போட்டவர் என அரச குடும்ப வட்டாரம் தெரிவித்துள்ளது.
தமக்கு பின்னர் கமிலா பிரித்தானியாவின் ராணியாக பொறுப்பேற்பார் என மகாராணியார் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.