பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் போலியோ கிருமிகள்

0

பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் போலியோ கிருமிகள் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக, குழந்தைகளைத் தாக்கி நிரந்தரமாக உடற்குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்திவிடக்கூடியவை.

சமீபத்தில், பிரித்தானியாவில் 40 ஆண்டுகளுக்குப் பின் போலியோ நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 21 ஆம் திகதி, அமெரிக்க நகரமான நியூயார்க்கில் கழிவுநீரில் மேற்கொண்ட ஆய்வில் போலியோ வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவைப் பொருத்தவரை 1994ஆம் ஆண்டுடன் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது.

மற்ற நாடுகளில் மீண்டும் போலியோ கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடாவிலும் போலியோ திரும்பவும் தாக்கும் என கனடா சுகாதார ஏஜன்சி எச்சரித்துள்ளது.

ஆகவே, கனடாவில் நகரங்கள் பலவற்றில், கழிவுநீரில் போலியோ வைரஸ்கள் காணப்படுகின்றனவா என்பதை அறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்க உள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here