பிரித்தானியாவை தாக்கவுள்ள பேராபத்து… நிபுணர்கள் எச்சரிக்கை

0

கொரோனாவை தொடர்ந்து பல்வேறு நோய்கள் பிரித்தானியாவைத் தாக்கிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் அடுத்ததாக X நோய் என்னும் ஒரு நோய் பிரித்தானியாவைத் தாக்க கூடும் என அரசு அதை எதிர்கொள்ளத் தயாராகுமாறும் சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் கழிவுநீர் மாதிரிகளில் குழந்தைகளை தாக்கி நிரந்தரமாக கை கால்களை செயலிழக்கச் செய்துவிடும் பயங்கர நோயான போலியோவை உண்டாக்கும் வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 910 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்தில், Crimean-Congo haemorrhagic fever என்னும் ஒரு நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

சமீபத்தில் Lassa fever என்னும் நோயையும், பறவைக் காய்ச்சலையும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

கொள்ளைநோய்களின் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கூறும் மருத்துவ நிபுணர்கள், அடுத்து X நோய் என்னும் ஒரு நோய் பிரித்தானியாவைத் தாக்கலாம் என்கிறார்கள்.

இந்த X நோய் என்பது, இதுவரை மனித இனம் கண்டிராத பயங்கரமான ஒரு நோய்க்கிருமியால் உருவாகும் ஒரு சர்வதேச தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here