பிரித்தானியாவை அச்சுறுத்தும் குரங்கம்மைத் தொற்று …. நிபுணர்கள் அதிர்ச்சி

0

பிரித்தானியாவை அச்சுறுத்தும் குரங்கம்மைத் தொற்று …. நிபுணர்கள் அதிர்ச்சி

பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கம்மை நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை பிரித்தானிய சுகாதார அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்தில் இம்மாதம் 7 ஆம் திகதி ஒருவருக்கு குரங்கம்மைத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அதற்கும், இப்போதைய தொற்றுக்கும் தொடர்பில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

தொற்றுக்கு ஆளானவர்களில் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொற்றுக்கு ஆளான இந்த இருவருக்கும், எப்படி, எங்கிருந்து தொற்று பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

குரங்கம்மை என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். இந்நோய்த்தொற்றுக்கு ஆளாகுவோரில் பத்தில் ஒருவர் உயிரிழக்கக்கூடும்.

முதன்முதலில், 2018ஆம் ஆண்டு இந்நோய் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

நைஜீரியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த ஒருவரிடமிருந்து ஒரு செவிலியர் உட்பட இருவருக்கு இந்நோய் பரவியது.

இந்நிலையில், இந்த குரங்கம்மை நோய், தொற்றிய ஒருவருடன் மிக நெருக்கமாக இருப்பவர்களுக்கு மட்டுமே பரவக்கூடும்.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவாது என்பதால், பொதுமக்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் மிகக் குறைவு என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here