பிரித்தானியாவை அச்சுறுத்தும் எலி வைரஸ்… பீதியில் மக்கள்!

0

பிரித்தானியாவில் லாஸ்சா வைரஸ் (Lassa Virus) காய்ச்சலில் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துள்ளார்.

மேலும் இரண்டு நபர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் குறித்து பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

லாஸ்சா காய்ச்சலானது, எலிகள் சிறுநீர் அல்லது மலம் கழித்த உணவு பொருள்களை உண்பதால் ஏற்படக்கூடியது.

தொடுவது போன்ற செயல்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் ஆனது, தலைவலி, தொண்டை வலி, மற்றும் வாந்தி ஆகிய உபாதைகளை ஏற்படுத்தும்.

சிலருக்கு வாய், மூக்கு, மற்றும் அந்தரங்க பகுதிகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தவும் செய்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நோய்யால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த இறப்பு விகிதம் 1 சதவிகித்தில் காணப்படுகின்றது.

80% பேருக்கு அறிகுறிகள் இருப்பது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லாஸ்சா வைரஸானது 5ல் ஒருவருக்குக் கல்லிரல் சிறுநீரகம் போன்றவற்றை தீவரமாக பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here