கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது.
அந்தவகையில் பிரித்தானியாவில் Omicron சமூக பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 100 பேருக்கு மேல் புதிய வகை Omicron தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் கண்டறியப்பட்டது. அதன் பிறகு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.
இந்நிலையில் பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவுள்ளது.
இன்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்ததின் படி பிரித்தானியாவில் Omicron வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.
ஆதலால் வரும் திங்கட்கிழமை முதல் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்யவேண்டும்.
அதேவேளை பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது அவசியம்.
இரவு நேரங்களில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் எடுத்து செல்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜோன்சன் மேலும் தெரிவிக்கையில் Omicron வைரஸ் இதுவரை 568 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.