பிரித்தானியாவை அச்சுறுத்தும் ஒமிக்ரோன்! கட்டாயமாக்கப்படும் விதிமுறை

0

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து உருமாறிய புது வகை வைரஸான ஒமிக்ரோன் உலக மக்களை அச்சுறுத்தி வருகின்றது.

குறிப்பாக இங்கிலாந்தில் தீவிரம் காட்டி வரும் வைரஸ் இதுவரை 14 பேருக்கு பரவியுள்ளது.

இதையடுத்து அங்கு கடைகளிலும், பஸ், ரெயில், மெட்ரோ ரெயில், விமானங்கள் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது,

இந்த புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவதால் புதிய வைரசை எதிர்கொள்வதற்கு அவகாசம் தரும். நமக்கு தெரிந்த வரையில் நமது தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களும் நமக்கு சிறந்த தற்காப்பாக அமையும்.

எனவே தகுதி வாய்ந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவை புதிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்தப்படும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here