பிரித்தானியாவை அச்சுறுத்தும் புதிய ஆய்வு…! எச்சரிக்கும் மருத்துவர்கள்…

0

பிரித்தானியாவில் முதன்முறையாக குதிரைலாட வௌவால்கள் (horseshoe bats) என்று அழைக்கப்படும் வௌவால்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தற்போது உலகம் முழுவதும் பரவும் Covid-19 என்னும் தொற்றை பரப்பும் கொரோனா வைரஸ் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய ஒரு வைரஸ்தான். East Anglia பல்கலைக்கழகம், Zoological Society of London (ZSL) மற்றும் இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் இதுவரை மனிதர்களுக்கு பரவியதற்கான ஆதாரம் மற்றும் எதிர்காலத்தில் அது பரவும் என்பதற்கான ஆதாரமும் இல்லை.

இந்த குறிப்பிட்ட வைரஸ் திடீர் மாற்றம் பெற்றால் அது மனிதர்களுக்கு நோய் உருவாக்கும் வைரஸாக மாறலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Somerset, Gloucestershire மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களிலிருந்து, 50க்கும் மேற்பட்ட குதிரைலாட வௌவால்களின் எச்சங்களை சேகரித்து ஆய்வு செய்ததில், அவற்றில் இந்த கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

Covid-19 நோய் உடைய மனிதர் ஒருவரிடமிருந்து கொரோனா வைரஸ் இந்த வௌவாலுக்கு பரவுமானால், அந்த வௌவாலின் உடலில் உள்ள கொரோனா வைரஸ் திடீர்மாற்றம் பெற வாய்ப்புள்ளது.

ஆகவே, இந்த வௌவால்கள் அல்லது அவற்றின் எச்சத்தை யாராவது தொட வேண்டிய சூழல் ஏற்பட்டால், முறையான பாதுகாப்பு உடை அணிந்துகொள்ளுமாறு ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here