பிரித்தானியாவை அச்சுறுத்தும் பேராபத்து! வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

0

பிரித்தானியாவில் தற்போது குளிர்காலம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் கொரோனாவை விட சளிக்காய்ச்சல் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கக்கூடும் என்று அரசாங்கத்தின் மூத்த தடுப்பூசி ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் இந்த இலையுதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுடன் காய்ச்சல் (flu) தடுப்பூசிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அந்தோனி ஹார்ண்டன் (Anthony Harnden) தெரிவித்துள்ளார்.

இந்த குளிர்காலத்தில் கொரோனாவை விட காய்ச்சல் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கக்கூடும் என்பதை நான் வலியுறுத்துவேன் என ஹார்ண்டன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் “கடந்த சில ஆண்டுகளாக காய்ச்சல் மிக மிகக் குறைந்துள்ளது, குறிப்பாக ஊரடங்கின் போது முற்றிலுமாக இல்லை.

காய்ச்சல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்டால், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி வீழ்ச்சி அடையும் என்பது அறிந்த ஒன்றாகும்.

இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே இந்த குளிர்காலத்தில் காய்ச்சல் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here