பிரித்தானியாவை அச்சுறுத்தும் டெல்டா..! அதிகரிக்கும் நோயாளிகள்…

0
epa08922785 A patient arrives at a hospital in London, Britain, 06 January 2021. Britain's national health service (NHS) is coming under sever pressure as Covid-19 hospital admissions continue to rise across the UK. EPA-EFE/ANDY RAIN

பிரித்தானியாவில் டெல்டா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த பயங்கரமான வைரஸால், பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொற்று எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் டெல்டா வைரஸின் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் புதிதாக 11,007 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை 10,000-த்தை கடந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, பிரித்தானிய அரசு நான்காவது படிநிலையாக ஜூன் 21 ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த கட்டுப்பாடுகளை தாமதப்படுத்தி, ஜூலை 19 ஆம் திகதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த 4 வாரங்களுக்குள் மேலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்டாவின் தாக்கத்தால் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வியாழக்கிழமையன்று 19 பேர் இறந்துள்ளனர்.

பிரித்தானியாவில் இதுவரை 127,945 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here