பிரித்தானியாவில் 9 வயது சிறுவன் மின்னல் தாக்கி பலி!

0

இங்கிலாந்தில் லங்காஷைர் மாகாணத்தில் உள்ள ப்ளாக்பூல் நகர மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் Spirit of Youth எனும் ஜூனியர் கால்பந்து அணியின் உறுப்பினர் என கூறப்படுகிறது.

அவன் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஸ்கூல் சாலை பகுதியில் உள்ள வெட்டவெளி மைதானத்தில் தனியார் கால்பந்து பயிற்சியில் கலந்துகொண்டுள்ளான்.

அப்போது, திடீரென விழுந்த இடி மின்னலில் சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவாமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சற்று முன்பு அவன் பரிதாபமாக உயிரிழந்ததாக பிளாக்பூல் பொலிஸார் அறிவித்தனர்.

மேலும், சம்பவம் குறித்து மேற்கட்ட விசாரணையை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்வத்தைத் தொடர்ந்து ஸ்கூல் சாலை மூடப்பட்டிருந்த நிலையில், அது இப்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here