பிரித்தானியாவில் 5 மாத பெண் குழந்தைக்கு நேர்ந்த கதி…! அதிர்ச்சியில் பெற்றோர்

0

பிரித்தானியாவின் Hertfordshire-ஐ சேர்ந்த அலெக்ஸ் மற்றும் டேவ் என்ற தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 31 ஆம் திகதி லெக்ஸி ராபின்ஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தையின் கை விரல்களில் அசைவின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்த அவரது பெற்றோர் மருத்துவர்களிடம் காண்பித்தனர்.

இதையடுத்து மருத்துவர்கள் பரிசோதிக்கையில் அந்த குழந்தை, Fibrodysplasia Ossificans Progressiva (FOP) என்னும் மிகவும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 மில்லியன் பேரில் ஒருவரை மட்டுமே தாக்கக்கூடிய இந்த FOP நோயானது ஒருவரின் உடலில் உள்ள தோலை கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாற்றும் என்றும் இவர்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 40 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் எனவும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதோடு இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் 20 வயதில் படுத்த படுக்கையாக ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த குழந்தைக்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை.

இந்த குழந்தைக்கு எந்தவொரு ஊசியும், தடுப்பூசியும் செலுத்த முடியாது என்றும் குழந்தை வளர்ந்தபின் இவளால் குழந்தை பெற்றெடுக்கவும் முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறுமியின் பெற்றோர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

மேலும், லெக்ஸியின் பெற்றோர் இந்த நோய் குறித்த ஆராய்ச்சிக்கும், தங்கள் மகளை காப்பாற்றுவதற்கும் நிதி திரட்ட தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here