பிரித்தானியாவில் 29-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறை

0

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் வரும் 29-ஆம் திகதி முதல் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் 2021 என்ற தலைப்பில் புதிய நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதாவது பிரித்தானியாவை விட்டு சரியான காரணமின்றி வெளியே செல்ல முயற்சித்தால், 5000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது

பிரித்தானியாவிற்கு வெளியே பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள் பயண அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதைச் செய்யத் தவறியவர்களுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த விதிமுறைகள் மார்ச் 29 முதல் நடைமுறைக்கு வரும். கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியா அரசு வேலைக்கு செல்லும் மக்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும் படி வலியுறுத்தப்படுகின்றது.

மேலும், இரண்டு வீடுகளின் குழுக்கள், அல்லது வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர் வரை கூடிய கூட்டங்களும் வரும் மார்ச் 29-ஆம் திகதி முதல் வெளியில் சந்திக்க அனுமதிக்கப்படும்.

வெளிப்புற விளையாட்டு வசதிகளும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளில் மக்கள் பங்கேற்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here