பிரித்தானியாவில் 2 வாரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா?

0

பிரித்தானியாவில் நாளுக்கு நாள் ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடுமையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிளான் சி-யின் கீழ் லோசன வழிகாட்டுதல் முதல் ஊரடங்கு வரையிலான திட்டங்கள் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளதாக The Financial Times தெரிவித்துள்ளது.

பிரதமர் வழிகாட்டுதல் பாதையில் செல்ல விரும்புவதாகவும், ஆனால் அவர் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என போரிஸ் ஜான்சனின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன.

கிறிஸ்துமஸுக்குப் பிறகு இரண்டு வார ஊரடங்கிற்கான வரைவு விதிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன என The Times தெரிவித்துள்ளது.

வேலை விஷயங்களுக்கு தவிர மற்றவர்களை உட்புறங்களில் சந்திக்க தடை மற்றும் வெளிப்புறச் சேவைக்கு மட்டுமே பப்கள் மற்றும் உணவகங்களுக்கு அனுமதி போன்ற நடவடிக்கைகள் அமுல்படுத்துப்படலாம் என The Times தெரிவித்துள்ளது.

வெளிவரும் அனைத்து தரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கும், இந்த மாறுபாட்டைப் பற்றி மேலும் அறியும் அதேவேளையில் நடவடிக்கைகளை பரிசீலனை செய்வோம் என அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here