பிரித்தானியாவில் 19 வயது இளம் பெண்ணை கொடூரமாக கொன்ற மர்ம நபர்…

0

பிரித்தானியாவில் பிர்மிங்காம் நகரில் நியூட்டன் பகுதியில் உள்ள Unett தெருவில் உள்ள ஒரு வீட்டில் 19 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அக்கபக்கத்தினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், பொலிஸார் சென்று பார்த்தபோது, அந்த வீட்டிற்குள் 19 வயது இளம் பெண், பலமுறை கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

பொலிஸார் வரும் நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் அப்பகுதியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

அந்த நபர் இறந்து கிடக்கும் பெண்ணிற்கு நெருங்கிய தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வீட்டில் ஒரு குழந்தை இருந்திருக்கலாம் என்றும், அதனை அந்த சந்தேகநபர் தூக்கிக்கொண்டு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மேலும், பொலிஸார் அந்த வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here