பிரித்தானியாவில் 16 வயது சிறுமியை கொன்ற இளைஞன் கைது…

0

பிரித்தானியாவில் வேல்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 31 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வின்ஜிங் லின் என்ற 16 வயது சிறுமி அன்றைய தினம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் நடந்த பிறகு குறித்த சாலை மூடப்பட்டது.

இந்த கத்தி குத்து கொலை சம்பவம் தொடர்பாக சுன் ஜூ (31) என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதோடு 38 வயது நபரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சுன் ஜூ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இதனிடையில் மிகவும் மென்மையான ஆத்மா என சிறுமி வின்ஜிங் லின்க்கு குடும்பத்தார் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here