Covid-19 வைரசுக்கு எதிராக சிறந்த தடுப்பூசிகளை உருவாக்க உதவும் முயற்சியில் பிரித்தானிய அரசு உலகிலேயே முதல் முறையாக கடந்த ஆண்டு புதிய ஆய்வுக்கு அங்கீகாரம் அளித்தது.
அது வேண்டுமென்றே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதல் இந்த ஆய்வாய் ஆரம்பித்தது.
அதன் முதல் கட்டமாக அதில், தொற்றுநோயைத் தூண்டுவதற்கு எவ்வளவு வைரஸ் தேவை என்பதைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இரண்டாவது கட்டத்தில், ஒருவர் வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து தடுக்கத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியைத் தீர்மானிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
தொற்றைத் தடுக்க எந்த அளவு ஆன்டிபாடிகள் அல்லது நோயெதிர்ப்பு டி-செல்கள் தேவை என்பதைத் தீர்மானிக்கப்படும்.
தடுப்பூசி பெறுவதற்கு முன் வைரஸின் அசல் மாறுபாட்டால் இயற்கையாகவே பாதிக்கப்பட்ட அல்லது தடுப்பூசி போடப்பட்ட – தன்னார்வலர்களை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சோதனையின் கண்டுபிடிப்புகள் எதிர்கால தடுப்பூசி வளர்ச்சியை மிக விரைவாகவும் திறமையாகவும் செய்ய உதவும்.
நோயால் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் காணப்படுவதால் பல்கலைக்கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பங்கேற்பாளர்கள் ஆரோக்கியமாகவும் 18-30 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.
அவர்கள் குறைந்தபட்சம் 17 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் மற்றும் அறிகுறிகளை உருவாக்கும் எவருக்கும் ரீஜெனெரானின் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை Ronapreve வழங்கப்படும்.