பிரித்தானியாவில் வனப்பகுதியில் காணப்பட்ட இளம் பெண்ணின் சடலம்…..

0

பிரித்தானியாவின் ஹோவ் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான ஆமி ஸ்பிரிங்கர். உடலளவில் கொஞ்சம் பாதிக்கப்பட்டவர்.

இவர் கடந்த 19ம் திகதி திடீரென்று அவரது குடியிருப்பில் இருந்து மாயமாகியுள்ளார்.

உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிசார், தீவிரமாக தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு போர்ட்ஸ்லேட் அருகே வனப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரியவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆமி ஸ்பிரிங்கர் மாயமானதன் நோக்கம் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இல்லை.

உறவினர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூராய்வுக்கு பின்னரே, மரண தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here